இறால் சிப்ஸ்
0
தேவையான பொருட்கள்:
கழுவி சுத்தம் செய்த இறால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
உள்ளி (பூண்டு) விழுது - 1 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
அடித்த முட்டை வெள்ளை கரு - 2 முட்டையில் இருந்து
காய்ந்த பாண் அல்லது ரஸ்க் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கழுவி சுத்தம் செய்த இறால், மஞ்சள்தூள், உப்பு, இஞ்சிவிழுது, உள்ளி(பூண்டு)விழுது, (விரும்பினால்) அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து லேசாக பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
அதன் பின்பு ஊறவைத்த இறலை லேசாக நசுக்கி முட்டையில் நனைத்து பாண் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து பரிமாறவும்.