இறால் கோலா
தேவையான பொருட்கள்:
இரால் - 1/4 கிலோ
ஊறவைத்த கடலை பருப்பு - 100 கிராம்
முட்டை - 1
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1
மசாலா தூள் -2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
பூண்டுவிழுது - 1 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணெய் - தாளிப்புக்கு
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இராலை சுத்தம் செய்து அதில் சோம்புதூள். உப்பு, 2 தேக்கரண்டி மசாலாதூள் சேர்த்து நன்கு வரட்டிக்கொள்ளவும்.
பின் வரட்டிய இராலை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
ஊறவைத்த கடலை பருப்பில் சிறிது உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.சிறிது தக்காளி வெங்காயம் தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்.
பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம்,கருவேப்பிலை போட்டு வதக்கி,பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்,பின் தயிர்,தக்காளியை போட்டு வதக்கி , நறுக்கிவைத்த வெங்காயம்,தக்காளியை சேர்த்து கிளறவும்.
பின் மசாலாதூள்,பச்சைமிளகாய்,நறுக்கிய கொத்தமல்லி இலை இவற்றை சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெங்காயம் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி அதில் அரைத்த இரால்,அரைத்த கடலைபருப்பு இவற்றை சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.
பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளை போட்டு டீப் ஃப்ரை பண்ணி எடுத்து பரிமாறவும்.