இறால் அவரை பொரியல் (1)
0
தேவையான பொருட்கள்:
இறால் - 1/4 கிலோ
அவரைக்காய் - 10
வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 4 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், அவரைக்காயை பொடியாக நறுக்கவும்.
ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி இறாலை போட்டு லேசாக வதக்கி தூள்களை போட்டு கிளறி அரைவேக்காடு வெந்ததும் அவரைக்காய், வெங்காயத்தை போட்டு நன்கு பொரியவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.