இறால் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 200 கிராம்

உருளைக்கிழங்கு - 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

தக்காளி விழுது - 1/4 கப்

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு, சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து, ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு சீரகத் தூள், உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.

உருளைக்கிழங்கு வெந்து, நீர் வற்றி மசாலா பிரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வேக வைத்த கலவையைக் கொட்டி 3 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: