இரத்தம் பொரியல்
0
தேவையான பொருட்கள்:
இரத்தம் - ஒரு ஆட்டின் இரத்தம்
தேங்காய் - ஒரு மூடி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 7
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - சிறிது
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டின் இரத்தம் உறைந்து இருக்கும். தண்ணீர் சேர்த்து பிசைந்த பின் தண்ணீரை வடித்து விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி இரத்தத்தை போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தேங்காய் போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.