இரத்தப் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இரத்தம் - 1

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 30

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5 அல்லது 6

லச்ச கெட்ட கீரை - 10 (பெரிய இலையில் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கியது)

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.

பின் ஆய்ந்த கீரையை போட்டு வதக்கி ஒரு கையளவு தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வதக்கவும்.

பின் இரத்தத்தை நன்கு பிசைந்து வாணலியில் ஊற்றி 1/4 டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

உப்பு இரத்தத்திலேயே இருக்கும் சிலசமயம் உப்பு போடத்தேவையில்லை.

நன்கு வெந்தபின் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: