இக்கான் பக்கார்
தேவையான பொருட்கள்:
பாறை அல்லது வவ்வா மீன் 1 - 1
பழுத்த மிளகாய் அல்லது மிளகாய் வற்றல் - 5
தனியா - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் கிழங்கு - ஒரு செ.மீ துண்டு அல்லது 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3
சீனி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸியில் மிளகாய், வெங்காயம், மஞ்சள் (அல்லது) மஞ்சள் தூள், தனியா ஆகியவற்றை போட்டு அரைத்து வைக்கவும்.
அரைத்தவற்றுடன் உப்பு, எலுமிச்சை சாறு, சீனி கலந்து வைக்கவும். இக்கலவையில் ஒரு தேக்கரண்டி அளவு தனியாக எடுத்து வைக்கவும்.
மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் லேசாக கீறி விடவும் அரைத்த கலவையை எண்ணெய் கலந்து மீனின் வயிற்று பகுதியிலும், ரெண்டு பக்கமும் தடவி 10 நிமிடம் ஊற விடவும்.
பார்பிக்யூவில் வைத்து மீனை சுட்டெடுக்கவும்.
பார்பிக்யூ அடுப்பு இல்லாதவர்கள் மண் பூந்தொட்டியில் முக்கால் பாகம் மணல் நிரப்பி அதன் மீது கரிகொட்டைகளை போட்டு தணல் ஏற்படுத்தி அதன் மீது இரும்பு வலை வைத்து மீனை சுடலாம். கரிக்கொட்டைகளை எரிக்க சமையல் எண்ணெய் பயன்படுத்தவும். OTG அவனில் பேக் செய்தும் எடுத்து தனியாக எடுத்து வைத்துள்ள அரைத்த கலவையை எண்ணெயில் ஒரு நிமிடம் வதக்கி டிப்பிங் சாஸாக வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
விருப்பப்பட்டால் டிப்பிங் சாஸில் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளலாம்.