ஃப்ரைடு சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ் - 4 (அல்லது) தொடையுடன் கூடிய லெக் பீஸ் - 2
தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எலுமிச்சை - 1
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
ஃபுட் கலர் - சிறிது (விரும்பினால்)
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு
செய்முறை:
தயிருடன் சர்க்கரை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, இதில் சிக்கன் துண்டுகளை பிரட்டி ஊற விடவும்.
இந்த கலவை குறைந்தது 2 மணி நேரம் ஊற வேண்டும்.
பின் ஃப்ரெஷ் மிளகை பொடித்து சேர்த்து 220 C’ ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும். விரும்பினால் இப்போது சாட் மசாலாவும் சேர்க்கலாம். 10 நிமிடத்துக்கு ஒரு முறை திருப்பி விடவும். வெந்ததும் எடுத்து எலுமிச்சை பிழிந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
பேக் செய்யாமல் க்ரில் கூட செய்யலாம். க்ரில் செய்தால் இதைவிட சுவையாக இருக்கும்.