ஃபிஷ் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 6 துண்டுகள்

கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி

தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை பழம் - ஒரு மூடி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் கார்ன் ஃப்ளாருடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து, எலுமிச்சைச் சாறு பிழிந்துவிடவும்.

அதனுடன் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையில் மீன் துண்டுகளை பிரட்டி எடுக்கவும்.

பிரட்டி எடுத்த மீன் துண்டுகளை ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்த மீன் துண்டுகளைப் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: