ஃபிஷ் ஃபிங்கர்ஸ்
தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் அல்லது வௌவால் மீன் - 1/4 கிலோ
மைதா மாவு - 3 மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
ப்ரெட் அல்லது ரஸ்க் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீன் துண்டுகளைச் சுத்தம் செய்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் தடவி வைக்கவும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் விடும்.
பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மீன் துண்டுகளை 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் விரல் நீளத்தில் துண்டுகளாக்கி கொள்ளவும்.
மைதா மாவுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகளை மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து, ரஸ்க் தூளில் பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சாஸுடன் சாப்பிடலாம்.