ஸ்பைஸி கறிக் குழம்பு
தேவையான பொருட்கள்:
ஊற வைக்க:
ஆட்டு கறி - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - சிறிது
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
மல்லி தழை - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - 1/2 மூடி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
வர மிளகாய் - 1 தேக்கரண்டி
முந்திரி - 5
பூண்டு - 10 பல்
இஞ்சி - 2 துண்டுகள்
மல்லித் தழை - சிறிது
தக்காளி - 1
வெங்காயம் - 1
தாளிக்க:
எண்ணெய் - தாளிக்க
பட்டை - 2
கிராம்பு - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கடுகு - சிறிது
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - பாதி
கறிவேப்பிலை - 5 இதழ்
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். கறியுடன் ஊற வைக்க கொடுத்த பொருட்களை போடவும்.
நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும்
குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைத்த கறி, அரைத்து வைத்துள்ளவற்றில் வெங்காயம் மற்றும் தக்காளி தவிர மசாலாவை சேர்க்கவும்.
இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு 5 விசில் வரை விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்து வெடிக்க விட்டு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த வெங்காயத்தையும் சேர்க்கவும்.
இப்போது குக்கரில் வெந்த கறி கரைசலை கடாயில் ஊற்றி 5 நிமிடம் கிளறவும்.
பின் அரைத்து வைத்துள்ள தக்காளி கரைசலை ஊற்றி பச்சை வாசம் போகும்படி 10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
நன்கு கிரேவி போலவும் சப்பாத்தி, பூரிக்கு சுவையாக இருக்கும். சாதத்திற்கும் ஏற்றது.