முட்டை புளிக்குழம்பு

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

சின்ன வெங்காயம் - 1 கப்

தக்காளி - 2

முழுப் பூண்டு - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - சிறிய எலுமிச்சை அளவு

திக்கான தேங்காய்ப் பால் - 3/4 கப்

கடுகு, வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மூன்று முட்டைகளை வேகவைத்து கீறி வைக்கவும். மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து ஊற்றி தனியாக அடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் புளியைக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

வெங்காயம், பூண்டு நன்கு வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்க்கவும்.

அத்துடன் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடவும்.

பச்சை வாசனை அடங்கி குழம்பு சற்று கெட்டியானதும் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி வேகவிடவும்.

முட்டை வெந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றி லேசாக கொதிக்கவிடவும்.

பிறகு அவித்த முட்டைகளைச் சேர்த்து வேகவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.