முட்டை சம்சோரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 2

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 1 பல்

கறிவேப்பிலை - 1 கொத்து

கடுகு - 1/4 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய் துருவல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு சேர்த்து மையாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து தண்ணீர் உப்பு சேர்க்கவும்.

தண்ணீர் நல்ல கொதித்ததும் முட்டையை உடைத்து மஞ்சள்கரு உடையாமல் ஒவ்வொன்றாக ஊற்றவும்.

முட்டை வேகும் வரை கிளற கூடாது. முட்டை வெந்ததும் அரைத்த தேங்காய் கலவை ஊற்றி சூடாக்கவும்.

அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம். கொதித்தால் தேங்காயும் தண்ணீரும் தனித்தனியாக பிரிந்து விடும்.

குறிப்புகள்:

சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.