முட்டை ஆம்லெட் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

தேங்காய் - அரை மூடி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப

பச்சை மிளகாய் - 3

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு - சிறிதளவு

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

சீரகம், மிளகு, தேங்காய் மூன்றையும் விழுதாக அரைக்கவும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பாதி வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு நன்கு அடிக்கவும்.

அதை தோசைக்கல்லில் ஆம்லெட்டாக ஊற்றி எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும், பின்பு மீதியுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கி பின்னர் தக்காளி சேர்க்கவும். தூள் வகைகளை போட்டு வதக்கி பச்சை வாசனை போனவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

பின்பு அரைத்த தேங்காய் விழுதினை போட்டு சிறிது கொதித்தவுடன், நறுக்கி வைத்த ஆம்லெட்டை போட்டு கொதிக்க விடவும்.

கொதித்த பின்பு இறக்கி மல்லித் தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.