மீன் முளகிட்டது
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 மேசைக்கரண்டி
குடம் புளி - 3
தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை,வெந்தயம் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குடம் புளியை சிறிது நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம் தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வேகும் வரை வதக்கவும்.
பிறகு தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும்.
அத்துடன் ஊற வைத்த குடம் புளிச் கரைசலைச் சேர்க்கவும்.
பிறகு குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து மசாலா மற்றும் புளியின் பச்சை வாசனை அடங்கியதும் மீன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும்.
பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 15 நிமிடங்கள் கழித்து திறந்து கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
குடம் புளி இல்லாதவர்கள் சாதாரண புளியை உபயோகிக்கலாம்.
தேங்காய் எண்ணெய் சேர்க்க விரும்பாதவர்கள் சமையல் எண்ணெயைச் சேர்த்துச் செய்யலாம்.