மீன் குழம்பு (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

கீறிய பச்சை மிளகாய் - 2

புளி கரைசல் - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

வேர்கடலை - 1 கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

வெந்தயம் - சிறிதளவு

எண்ணை - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வெந்ததும், பச்சை மிளகாய், மீன் சேர்க்கவும்.

இதில் புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வேக விடவும் (தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்).

வேர்கடலையை எண்ணெயில் வறுத்து அரைத்து வைக்கவும்.

மீன் வெந்ததும் அரைத்த வேர்கடலை விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும், கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்தவற்றை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: