மீன் குழம்பு (15)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 500 கிராம்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

புளி கரைச்சல் - 2 கப்

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கருவடாம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10 இலை

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து வெட்டி கொள்ளவும். வெங்காயம் தக்காளியை அரிந்து கொள்ளவும்.

புளிக்கரைசலில் தக்காளியை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

பூண்டை, சிறிது வெங்காயம் மற்றும் சோம்பு சேர்த்து நசுக்கி கொள்ளவும் அல்லது மிக்சியில் ஒரு சுற்று சுற்றி அரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவடாமை போடவும்.

பிறகு கறிவேப்பிலை, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் புளிக்கரைசலை, இரண்டு கப் தண்ணீருடன் ஊற்றவும்.

நன்கு கொதி வந்தவுடன் மீனை போடவும். 5 நிமிடம் ஆனவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: