மீன் குழம்பு (12)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மீன் - 1 கிலோ

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

தேங்காய் - அரை மூடி

கசகசா - 1 1/2 தேக்கரண்டி

புளி - 2 நெல்லிக்காய் அளவு

தக்காளி - 3

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பச்சைமிளகாய் - 4

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

சின்ன வெங்காய விழுது - 1/4 கப்

தனியா தூள் - 5 தேக்கரண்டி

மாங்காய் - 1

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - 2 குழிக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து வைக்கவும்.

வெந்தயம் மற்றும் சீரகத்தை லேசாக மட்டும் வறுத்து பொடிக்கவும்

கசகசாவை ஒரு டம்ளர் நீர் விட்டு வேகும் வரை கொதிக்க வைத்து பின் தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.

புளியை அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் கரைக்கவும். அத்துடன் தனியா தூள் சேர்த்து கரைத்து வைக்கவும்.

தக்காளியை நான்காகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும், பச்சைமிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடித்த சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்

அத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து உடைக்காமல் லேசாக கிளறவும்.

ஓரளவுக்கு தக்காளியின் தோல் சுருங்கும் போது சின்ன வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்

பின்னர் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதி வந்து மசாலா வாசனை போனதும் அரைத்த தேங்காய் கசகசா விழுது மற்றும் மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.

மீண்டும் கொதி வந்ததும் மீனை ஒவ்வொன்றாக வெவ்வேறு இடங்களில் போட்டு தேவைக்கு உப்பும் சேர்த்து வேக விடவும். மீன் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: