மீன் குழம்பு (10)
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய்ப்பொடி - 4 மேசைக்கரண்டி
மல்லிப்பொடி - 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
புளி - பெரிய எலுமிச்சை யளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 5
பூண்டு - 4 பல்
தாளிக்க:
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
சோம்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை இளஞ்சூட்டில் வறுத்து, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு பொரியவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இரண்டாக கீறிய பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்கு வதக்கவும்.
அதில் புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
குழம்பு மிகவும் திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
நன்கு கொதிக்கும்பொழுது மீனை நன்கு கழுவி ஒவ்வொன்றாக குழம்பில் போட்டு கொதிக்கவிட வேண்டும். எண்ணெய் மிதந்து வரும்பொழுது அடுப்பிலிருந்து இறக்க பரிமாறவும்.