மட்டன் காலிஃப்ளவர் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/4 கிலோ

காலிஃப்ளவர் - 1

வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 250 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் - 6

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 6

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா பொடி - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

தேங்காய் பால் - 1/4 கப்

தயிர் - 3 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நல்ல கெட்டியான தயிரில் மட்டனை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து உப்பிட்ட சுடு தண்ணீரில் போட்டு எடுத்து வைக்க வேண்டும்.

எண்ணெய் சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

தக்காளியை பிசைந்தது போல் சேர்க்க வேண்டும். வேண்டுமானால் சிறிது தண்ணீர் தெளித்தால் சீக்கிரம் வதங்கி விடும்.

பூண்டு சேர்த்து வதக்கி மிளகாய்களை சேர்த்து எல்லா பொடியையும் சேர்த்து கிளற வேண்டும்.

காலிஃப்ளவர் மற்றும் கறியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கறி நன்கு வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: