மசாலா முட்டை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

வெங்காயம் - 2

தக்காளி - 3

புளி - எலுமிச்சைப்பழம் அளவு

பூண்டு - 7 பல்

இஞ்சி - 1 சிறிய துண்டு

மிளகாய்த்தூள் - 2 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1/2 கப்

அண்டிபருப்பு - 7

பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி

கசகசா - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

பட்டை - 1 சிறிய துண்டு

கிராம்பு - 2 எண்ணம்

பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கீற்று

எண்ணெய் - 1/4 கப்

செய்முறை:

முட்டைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விட்டு 1/2 டீஸ்பூன் உப்பு போட்டு வேகவைக்க வைத்து ஓடுரித்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

புளியை 2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், அண்டிபருப்பு, பெருஞ்சீரகம், கசகசா இவற்றை நைஸாக அரைக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின்னர் பூண்டு, இஞ்சி, வெங்காயம், இவற்றை நன்றாக வதக்கவும்.

வதக்கியதும் தக்காளியை போட்டு நன்றாக தக்காளி கரையும் வரை வதக்கவும்.

அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு நன்றாக கிளறவும்.

அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவைக்கவும். பாதி கொதிநிலையில் உப்பு போட்டு, வெந்த முட்டைகளை நான்கு புறமும் லேசாக கீறி விட்டு போடவும்.

2 நிமிடம் கழித்து அரைத்துவைத்துள்ள தேங்காய்துருவல் கலவையை சேர்க்கவும்.

எல்லாமும் சேர்ந்து வரும் போது உப்பு சரிப்பார்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: