போன்லெஸ் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 5
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பிரியாணி மசாலா பொடி - 2 தேக்கரண்டி
முந்திரி - 5
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு - தலா 2
சோம்பு -1 தேக்கரண்டி
கறிவைப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி
எலுமிச்சை - 1
தயிர் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி எலுமிச்சை சாறு ,மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து பிசறி 15 நிமிடங்கள் வைக்கவும்
பிறகு அதை கழுவி பிழிந்துவிட்டு லேசாக கீறிவிட்டு இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் ,பிரியாணி மசாலா ,தயிர் சேர்த்து பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணை விட்டு சின்ன வெங்காயம் ,தக்காளி ,தேங்காய்,முந்திரியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி ஆறியதும் விழுகாக அரைக்கவும்
வாணலியில் எண்ணைய் விட்டு பட்டை, இலவங்கம் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை வதக்கி அதனுடன்
ஊறிய சிக்கன் துண்டுகள் போட்டு நன்றாக வதக்கி அரைத்த விழுது சேர்த்து வதக்கி தேவைக்கு நீர் விட்டு கலந்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கி பரிமாறவும்.