பேச்சுலர்ஸ் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 3 பெரியது
எண்ணெய் - 50 கிராம்
மிளகாய்பொடி - 3 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 மேசைக்கரண்டி
சீரகத்தூள் - 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1 மேசைக்கரண்டி
இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 கப்
தாளிக்க:
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
அன்னாசிக்காய் - 2
செய்முறை:
சிக்கனை கழுவி தண்ணீர் வடித்து விட்டு மஞ்சள்பொடி, சோம்புத்தூள், சீரகத்தூள், இஞ்சிபூண்டு விழுது போட்டு பிசறி 10 நிமிடம் ஊறவிடவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து வெங்காயம், தக்காளி நன்கு வதக்கவும். வதங்கியவுடன் பிசறிய சிக்கனை சேர்த்து கிளறவும்.
சிக்கனில் வரும் தண்ணீர் வற்றியவுடன் மிளகாய்பொடி, மல்லிப்பொடி, உப்பு போட்டு 4 கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
10 நிமிடத்தில் மசாலா கொதித்து வெந்தவுடன் தேங்காய்ப்பால் விட்டு கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.