பூண்டு மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகு - 2 தேக்கரண்டி
தக்காளி - 1
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயம் - சிறிது
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தேங்காய் பால் - 1/2 கப்
கடுகு, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி (தாளிக்க)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய வெங்காயக் கலவையுடன் தக்காளியை அரைத்துச் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பெருங்காயம், சாம்பார் பொடி (அல்லது மிளகாய், தனியா தூள் 1:2 அளவில் கலந்தது), மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
பிறகு தேவைக்கேற்ப நீர் ஊற்றி மசாலா வாசம் போகக் கொதிக்கவிட்டு, புளி கரைசல் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.
அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு மீனைச் சேர்த்து மூடி வேகவிட்டு கடைசியாக தேவைக்கேற்ப ஃப்ரெஷ்ஷாக பொடித்த மிளகு தூள் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
விரும்பினால் மிளகு தூள் சேர்க்கலாம். சேர்க்காமலும் செய்யலாம்