நெத்திலி மொச்சை கருவாடு குழம்பு
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - தேவையான அளவு
மொச்சை - 100 கிராம்
கத்திரிக்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
மாங்காய் - இரண்டு துண்டுகள்
பச்சைமிளகாய் - 1
புளி - சிறிது
பூண்டு - 5 பல்
மல்லிப் பொடி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு
கறிவேப்பிலை
எண்ணெய்
செய்முறை:
முதலில் மொச்சையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். பின் அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து நீரை வடித்து விட்டு மொச்சையை தனியாக எடுத்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் கத்திரிகாயை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி மல்லி, மிளகாய் சிறிது வெங்காயம், பின் மஞ்சள் பொடிகளை அதில் போட்டு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து கரைத்துக் கொள்ளவும். பூண்டையும் தோலுரித்து அதில் சேர்க்கவும்.
அதை அப்படியே ஒரு வெறும் வாணலியில் ஊற்றி அதில் மாங்காய், கத்திரி சேர்த்து நெத்திலி கருவாடும் சேர்த்து சிறிது உப்பு போட்டு மூடி கொதிக்க விடவும்.
காய்கள் முக்கால் பதம் வெந்ததும் வேக வைத்த மொச்சையையும் அதில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பின் வேறு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து சிவக்க வறுக்கவும்.
பின்னர் அதில் குழம்பை ஊற்றவும். சுவையான நெத்திலி மொச்சை குழம்பு ரெடி.
குறிப்புகள்:
சூடான சாதத்துடன் சாப்பிட சுவை நன்றாக இருக்கும்.