நெத்திலி மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் - 3/4 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
கத்தரிக்காய் - 2
மாங்காய் - பாதி
முருங்கைக்காய் - 1
பூண்டு - 2 பற்கள்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
புளிக் கரைசல் - 1/4 கப்
எண்ணேய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கத்தரிக்காய், மாங்காய் மற்றும் முருங்கைக்காயை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளமாக கீறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைய வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் இக்கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்துக் கிளறவும்.
பிறகு தூள் வகைகளைச் சேர்த்து நன்கு பிரட்டவும்.
அத்துடன் நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், உப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். கலவை கொதிக்கத் துவங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி மீனைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இக் குழம்பிற்கு சின்ன வெங்காயம் சேர்த்தால் அதிகச் சுவை கொடுக்கும்.