நெத்திலி குழம்பு
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
வெங்காயம் - 3
நெத்திலி - 10
கத்திரிக்காய் - 4
முருங்கைக்காய் - 1
உருளைக்கிழங்கு - 3
தனியா தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
புளி - எலுமிச்சை பழ அளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சீரகம்
வெந்தயம்
சோம்பு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.
பின் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கிய பின் தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி நன்கு குழைந்ததும் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முருங்கைக்காய் போட்டு இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் புளிக்கரைச்சலை ஊற்றவும். புளிக்கரைச்சல் ஊற்றியவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.
குழம்பு நன்கு கொதி வந்தவுடன் நெத்திலியை போடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கி பரிமாறவும்
குறிப்புகள்:
காரம் அதிகம் தேவையென்றால் சாதாரண மிளகாய் தூளுக்கு பதில் தனி மிளகாய் தூள் பயன்படுத்தலாம்.