நெத்திலி கருவாட்டு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்திலி கருவாடு - 15 என்னம் (மண்டையை பிய்த்துவிட்டு தண்ணீரில் ஊற வைக்கவும்)

வட்டமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3/4 கப்

வட்டமாக நறுக்கிய தக்காளி - 1

புளி - கொலியளவு (கரைத்தது)

சாமபார் பொடி - 1 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 இனுக்கு

வெந்தயப்பொடி - 3/4 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

ஊற வைத்த கருவாடு உடன் உப்பு சேர்த்து மண் போகும் வரை நன்கு கழுவவும்.

வாணலியில் எண்ணைய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து பெருங்காயத்தூள், வெந்தயப்பொடி போட்டு அதனுடன் கருவாடையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி தே.அ உப்பு சேர்த்து சாம்பார் பொடி போட்டு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

பின் ஒரு கொதி கொதித்ததும் கரைத்த புளியை ஊற்றி 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி கொதித்து எண்ணைய் மேலே மிதந்து வரும் வரையும் கருவாடு வெந்து வரும் வரையும் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால் அதைப் பார்த்துக் கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.