நெத்திலிக் கருவாடு குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெத்திலிக்கருவாடு - 100 கிராம்

கத்திரிக்காய் - 100 கிராம்

முருங்கைக்காய் - ஒன்று

வாழைக்காய் - ஒன்று

வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 4

மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

புளி - நெல்லிக்காயளவு

உப்பு - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

தேங்காய் சில் - 2

செய்முறை:

கருவாட்டை தண்ணீரில் ஊற வைத்து கழுவினால் மண் போகிற அளவு கழுவவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அதில் நறுக்கின காய்கறிகளை போட்டு மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், உப்பு போட்டு கிளறி, புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பின் தேங்காயை அரைத்து ஊற்றி குழம்பு நன்கு கொதித்து வற்றியதும் இறக்கவும்.

குறிப்புகள்: