தேங்காய்பால் மீன் சால்னா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ

தக்காளி - 2

வெங்காயம் - 1

பூண்டு - 1

பச்சை மிளகாய் - 2

தேங்காய்ப்பால் - 3 கப்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மல்லி தூள் - 2 தேக்கரண்டி

மிளகு சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சைப்பழம் - 1

மல்லிக்கீரை - ஒரு கட்டு

எண்ணெய் - 2 அல்லது 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாதி பூண்டையும், வெங்காயத்தையும் நசுக்கிக் கொண்டு, தக்காளியையும் மீதியுள்ள பூண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு தாளித்து, சிவந்து வரும் போது வெந்தயம் போட்டு, வாசம் வந்தவுடன் மிளகாய் தூள் போட்டு, நறுக்கி வைத்துள்ள தக்காளியையும், பூண்டையும் போட்டு வதக்க வேண்டும்.

வதங்கியவுடன் தேங்காய்ப்பாலில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகு சீரகத்தூள், உப்பு போட்டு, பச்சை மிளகாயை அதில் உடைத்து போட்டு தாளித்ததில் ஊற்றி, மீன் துண்டுகளையும் போட்டு வேகவிட வேண்டும்.

வெந்தவுடன் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து ஊற்றி, மல்லிக்கீரையையும் நைசாக நறுக்கி போட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: