சேலம் மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள்:
மட்டன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
தேங்காய் - 1/4 மூடி
இஞ்சி - 2 அங்குல துண்டு
பூண்டு - 15 + 10 பல்
காய்ந்த மிளகாய் - 12
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தனியா - 3 மேசைக்கரண்டி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 3
கறிவேப்பிலை - 20
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியுடன் 15 பல் பூண்டை சேர்த்து அரைக்கவும். ஆட்டு இறைச்சியை கழுவி சிறிது உப்பு, மஞ்சள் தூள், பாதி இஞ்சி பூண்டு விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, மிளகாய் வற்றல், தனியா சேர்த்து வறுக்கவும்.
இதனுடன் பாதி கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, 10 சின்ன வெங்காயத்தை மட்டும் தனியாக வைத்துக் கொண்டு, மீதி வெங்காயத்தை அதில் போட்டு வதக்கியதை அரைத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில் சிறிது பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா போட்டு வதக்கி, பிறகு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும். இதையும் தனியாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெயை விட்டு சூடானதும் மீதம் இருக்கும் கறிவேப்பிலை, எடுத்து வைத்த 10 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு, மீதி உள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அத்துடன் வேக வைத்து எடுத்த ஆட்டு இறைச்சி, முதலில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.