சென்னை இறால் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 25 அல்லது 30

தக்காளி - 3

சின்ன வெங்காயம் - 10

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 5

புளி - சிறு கோலி அளவு

முந்திரி (தேவையென்றால்) - 1/4 கப்

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

தேங்காய் பால் - 1/4 கப்

கடுகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், சீரகம், உளுந்து - சிறிதளவு தாளிக்க

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு அனைத்தையும் சிறிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். புளியை நீரில் கரைத்துக் கொள்ளவும்.

சுத்தம் செய்த இறாலில், புளி கரைசலையும் உப்பையும் சேர்த்து தனியே ஊற வைக்கவும்.

முந்திரி சேர்ப்பதாக இருந்தால், ஒரு பாத்திரத்தில் சிறிது நெய்/எண்ணெய் விட்டு, முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின் பட்டை, கிராம்பு, வெந்தயம், சீரகம், உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின் சின்ன வெங்காயம், மீதம் இருக்கும் மூன்று பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கிய உடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

மஞ்சள் தூள் வெங்காயத்துடன் நன்றாக சேர்ந்த உடன் தனியா தூள் சேர்க்கவும்.

தனியா தூளும் நன்கு கலந்த பின் மிளகாய் தூள் சேர்க்கவும்.

எல்லா தூள்களும் நன்கு சேர்ந்த உடன், தக்காளியை சேர்க்கவும்.

தக்காளி நன்கு குழைந்தவுடன், இறாலை சேர்க்கவும். சிறிது நீரையும் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

இறால் வெந்த உடன், தேங்காய் பால் சேர்த்து கிளறி வேக விடவும். உப்பு சரி பார்த்து, வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியாக முன்பு வதக்கி வைத்திருந்த பெரிய வெங்காயத்தையும், வறுத்த முந்திரியையும் சேர்க்கவும்.

குறிப்புகள்: