செட்டிநாடு சிக்கன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 3

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 6 பல்

கொத்தமல்லித் தழை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

துருவிய தேங்காய் - 1/2 கப்

மிளகாய் வற்றல் - 8

கசகசா - 2 தேக்கரண்டி

தனியா - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கிராம்பு - 2

பட்டை - சிறு துண்டு

சோம்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா சேர்த்து வதக்கவும்.

இதில் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

இத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.

சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: