சுறா மீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுறா மீன் - 1/2 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

மல்லித் தழை - சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

மிளகு, சீரகத் தூள் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி

அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி

தயிர் - 1/4 கப்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து கொதி நீரில் போட்டு எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த தேங்காயில் உப்பு, தனியா தூள், மிளகு, சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தழை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் தயிர் சேர்த்து வதக்கவும்.

கரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். பின் சிறு தீயில் 15 நிமிடம் வைத்து மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும். எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: