சிறு பருப்பும் முட்டையும்
தேவையான பொருட்கள்:
பருப்புக்கு:
சிறு பருப்பு - முக்கால் டம்ளர்
பெருங்காய பொடி - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 8 இதழ்
பூண்டு - 3 பல்
எண்ணெய் + நெய் - 1 மேசைக்கரண்டி
முட்டைக்கு:
முட்டை - 3
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 2
எண்ணெய் + டால்டா - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிறு பருப்பில் பெருங்காய பொடி சேர்த்து வேகவைத்து மசித்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்ட வேண்டும்.
முட்டையை பொரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் தண்ணீரில் மிளகாய் தூள் மற்றும் உப்பை கரைத்து முட்டையை நன்கு அடித்து அதில் வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக அரிந்து போடவும். நன்கு கலக்கி டால்டா எண்ணெய் கலவையை ஊற்றி மூன்று முட்டைகளாக பொரித்து ஒன்றை நான்காக துண்டு போடவும். அது போல மூன்று முட்டைகளையும் துண்டு போட்டு பருப்பில் போட வேண்டும்.
அரை மணி நேரம் ஊறியதும் சாப்பிட வேண்டும்.