சிக்கன் பனீர் கிரேவி
0
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
பனீர் - 100 கிராம்
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
குடைமிளகாய் - 1
தக்காளிசாஸ் - 1 தேக்கரண்டி
சோயாசாஸ் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்தேடுக்கவும்.
கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளுடன், தனியா,சீரகத்தூள்,இஞ்சி பூண்டுவிழுது, .மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும்,
வட்டமாக நறுக்கிய குடைமிளகாய், பனீர் துண்டுகளை போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளிசாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கி பரிமாறவும்.