சிக்கன் குழம்பு (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 200 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி - சிறிதளவு

பூண்டு - 10 பல்

கொத்தமல்லி - சிறிதளவு

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய் பால் - 1 கப்

கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் இஞ்சியை தோல் நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கறியை சேர்த்து வதக்கவும்.

பின்னர் கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

கறி வெந்து ஆவி அடங்கியதும், வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றை கறியுடன் சேர்த்து தக்காளி மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான சிக்கன் தேங்காய்பால் குழம்பு தயார். மேலே கொத்தமல்லி தழை தூவவும். பிறகு பரிமாறவும்

குறிப்புகள்:

இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, ஊத்தப்பம் ஆகியவற்றிற்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும். வெறும் சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.