சிக்கன் குழம்பு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 1 கோப்பை

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

தேங்காய் பால் - 1 கோப்பை

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

கறி மசாலா தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை, ஏலக்காய் - 1

கிராம்பு - 4

பிரிஞ்சி இலை - 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பின் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.

அதன் பின் சிக்கன், மஞ்சள்தூள், மிளகாய் தூள், தனியாதூள், கறி மசாலா தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்க்கவும்.

கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனுடன் தேங்காய் பாலையும் சேர்க்கவும். குழம்பு நன்றாக கொதித்து மிளகாய் வாசம் போனதும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழை தூவவும். பிறகு பரிமாறவும்.

குறிப்புகள்: