சிக்கன் குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
கறிவேப்பிலை
பூண்டு - 5 பல்
சாம்பார் பொடி அல்லது மிளகாய் மல்லி கலவை தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
மிளகாய் வற்றல் - 5
தனியா - 1/2 மேசைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் (மீடியம் சைஸ்) - 1
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
ஊற வைக்க:
தயிர் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சிக்கன் துண்டுகளுடன் தயிர், உப்பு, மஞ்சள் தூள் கலந்து ஊற வைக்கவும். மற்ற தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். அதில் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வாசம் வர பிரட்டி எடுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள் சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் தூள் வகை சேர்த்து பிரட்டி அரைத்த விழுது சேர்த்து கலந்து விட்டு, தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும்.
மசாலா வாசம் அடங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதில் சின்ன வெங்காயத்துக்கு பதிலாக பெரிய வெங்காயமும் சேர்க்கலாம். ஆனால் சின்ன வெங்காயம் சுவை கூடும்.