கோழி தாளிச்சா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

துவரம் பருப்பு - 250 கிராம்

கத்திரிக்காய் - 4

உருளைக்கிழங்கு - 4

கேரட் - 3

செளசெள - 1

வாழைக்காய் - 1

சிறிய மாங்காய் - 1

வெங்காயம் - 1

தக்காளி - இரண்டு

பச்சைமிளகாய் - 3

தயிர் - ஒரு கோப்பை

புளி - எலுமிச்சைப்பழ அளவு

இஞ்சி பூண்டு விழுது - 4 கரண்டி

மிளகாய்தூள் - இரண்டு கரண்டி

மசாலாத்தூள் - இரண்டு கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு கரண்டி

தனியாத்தூள் - 5 கரண்டி

ஏலக்காய் + கிராம்பு - தலா 3

பட்டை - ஒரு துண்டு

மல்லிக்கீரை - ஒரு கைப்பிடி

புதினா - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - 3 கொத்து

எண்ணெய் + நெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பருப்பையும் கோழியையும் அது முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு மூன்று விசில் விட்டு வேக விடவும்.

காய்கறிகள் எல்லாவற்றையும் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.

அதனுடன் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கி தூள்களை போடவும். பின் எல்லா காய்கறிகளையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின் தயிரை ஊற்றி தனியாத் தூளை போட்டு கிளறி காய்கறி வேகும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

வேகவைத்தபருப்பு கறியுடன் புளியை இரண்டு முறை கரைத்து ஊற்றவும்.

காய்கறி வெந்ததும் அதில் பருப்புகலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு மேலே மல்லிக்கீரை கறிவேப்பிலை போட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: