கோழி தாளிச்சா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

துவரம் பருப்பு - 150 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

கத்திரிக்காய் - 3

உருளைக்கிழங்கு - 4

கேரட் - 1

சிறிய செளசெள - 1

வாழைக்காய் - 1

சிறிய மாங்காய் - 1

புளி - எலுமிச்சை அளவு

இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரக தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 5 கொத்து

மல்லித் தழை - 2 கொத்து

புதினா - 2 கொத்து

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

உப்பு - தேவையானஅளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நான்காக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை வட்டமாக நறுக்கவும். செளசெளவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். மாங்காயையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கிவிட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கி விட்டு, கோழியை சேர்த்து கிளறி விட்டு தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

அவற்றோடு மாங்காய் தவிர அனைத்து காய்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து, புளி கரைசலை ஊற்றவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

கறிவேப்பிலையை கொத்தாக போட்டு குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும்.

ப்ரஷர் அடங்கியதும் அதில் மாங்காயைச் சேர்த்து வேக விடவும். மாங்காய் வெந்தவுடன் மல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: