கறிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
வெங்காயம் - 25
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
மல்லி தூள் - 6 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 1
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
அன்னாசி மொக்கு - 1
அரைக்க:
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிது
வெங்காயம் - 5
தேங்காய் - 4 சில் (தனியாக அரைக்கவும்)
செய்முறை:
அரைத்த வேண்டியப் பொருட்களில் தேங்காயை தவிர மற்றப் பொருட்களை அரைத்து மட்டனில் தடவி வைக்க வேண்டும் .
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கறி கலவையை கொட்டி கிளற வேண்டும்.
மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 3 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 7 விசில் வைத்து வேக விட வேண்டும்.
குக்கர் பிரஷர் அடங்கியவுடன் தனியாக அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும்.
ஒரு கொதி கொதிக்க விட்டு குழம்பு கெட்டியானவுடன் இறக்கி பரிமாறவும்.