கருவாட்டு குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
கருவாடு - 3 அல்லது 4
நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய் - 1
இறால் - 5
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
மிளகு - 1/2 தேக்கரண்டி
பூண்டு -
தேங்காய் பால் - 1/2 கப்
புளிக்கரைசல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கருவாட்டை ஒரு வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் மற்றும் புளிக்கரைசலை கலந்து வைக்கவும். தேங்காய்பால் கலவையில் தூள் வகைகள், உப்பு, கருவாடு சேர்த்து கலந்துக் கொள்ளவும். அரைத்த வெங்காய விழுதினையும் தேங்காய் பாலுடன் சேர்க்கவும்.
மிக்ஸியில் பூண்டு மற்றும் மிளகை போட்டு அரைத்து பாதியை தாளிப்பிற்கும் மீதியை தேங்காய்பால் கலவையிலும் சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த பூண்டு, மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு ஆய்ந்த இறாலை சேர்க்கவும். நன்கு வதங்கியவுடன் கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் கலந்து வைத்திருக்கும் தேங்காய் பால் கலவையை தாளிப்பில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
கொதித்ததும் அடுப்பின் தணலை மிதமாக வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
குறிப்புகள்:
கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால் அதைப் பார்த்துக் கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.