கருவாட்டுக் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீலாக் கருவாடு - 1 துண்டு

பூண்டு - 100 கிராம்

கடுகு - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

புளி - 1/2 கோலியளவு

மிளகாய் வத்தல் - 1

மஞ்சள் தூள் - 3 சிட்டிகை

மிளகு - 1/4 தேக்கரண்டி

நல்லெண்ணைய் - 4 கரண்டி

உப்பு - தேவைக்கும் குறைவாக

செய்முறை:

கடுகு,சீரகம்,வத்தல்,மிளகு இவற்றை நன்கு அரைக்கவும்.

புளியை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக கரைக்கவும்.

புளித்தண்ணீரில் அரைத்த மசாலை கரைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி உரித்த பூண்டை நன்கு வதக்கவும்.

பின் அரைத்த மசாலாவை சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

பூண்டு நன்கு வெந்ததும் கருவாட்டை போட்டு நன்கு குழம்பு கொதித்ததும் இறக்கி பறிமாறவும்,

குறிப்புகள்:

கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால் அதைப் பார்த்துக் கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்