கத்திரிக்காய் கோழிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
கோழி கறி - 1/2 கிலோ
கத்திரிக்காய் - 1/4 கிலோ
தேங்காய் - 1/2 மூடி
வத்தல் - 5
சோம்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 200
தக்காளி - 200
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்தூள் - சிறிது
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காய், வத்தல், சோம்பு இவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்களியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.
கத்திரிக்காயை காம்பை எடுத்துவிட்டு நீளவாக்கில் கீறிவைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் கருவேப்பிலை,வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
பின் பச்சைமிளகாய் போட்டு வதக்கி கோழிகறியை போட்டு வதக்கவும்.
பின் மஞ்சள்தூள் ,உப்பு, தனியாதூள் போட்டு வதக்கி அரைத்த மசாலாவை போட்டு நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
கறி சிறிது வெந்ததும் கத்திரிக்காயை போட்டு கிளறி வேக விடவும் நன்கு கறியும் ,கத்திரிக்காயும் வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.