எலும்பு குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெஞ்செலும்பு - 1/2 கிலோ

கறி - 1/4 கிலோ

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 2

தக்காளி - 1

இஞ்சி மற்றும் பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

மல்லி பொடி - 1 1/2 மேசைக்கரண்டி

மிளகாய் பொடி - 1 மேசைக்கரண்டி

பட்டை, கிராம்பு, பிரியாணி இலை - தாளிக்க

அரைக்க:

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகு - 10

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

எண்ணை - 3 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் எலும்பை கழுவி இரண்டு டம்ளர் தண்ணீருடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விடவும்.

கறியை ஒரு டம்ளர் தண்ணீரில் முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும்.

அரைக்க வைத்துள்ளவற்றில் தேங்காயை தனியாகவும், மற்ற பொருள்களை தனியாகவும் அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ள பொருள்களை போட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி சிவந்ததும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வாசனை வந்ததும் தக்காளி சேர்க்கவும்.

பிறகு மல்லிப் பொடி, மிளகாய் பொடி சேர்க்கவும். மூன்று நிமிடம் கிண்டி வேக வைத்த எலும்பு, கறி, சோம்பு சீரக விழுதினைப் போட்டு(எலும்பு, கறியில் உள்ள நீர் போதவில்லை என்றால் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்) பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்ததும் தேங்காய் விழுது கலக்கவும். முன்று நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: