இறால் குழம்பு (4)
தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பூண்டு - 3 பல்
தக்காளி - 3
மிளகாய்தூள் - 2 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - மூன்று கொத்து
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
தேங்காய், சீரகத்தை அரைக்கவும்.
சோம்பை நன்றாக தட்டி வைக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்கவும்.
இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்றவும். ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.