ஆட்டுக்கால் குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கால் - ஒரு ஆட்டின் கால் (4)

மொச்சை - 100 கிராம்

வரமிளகாய் - 15

சீரகம் - 1 தேக்கரண்டி

மல்லி - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - சிறு துண்டு

மிளகு - 1 தேக்கரண்டி

தேங்காய் - 3 சில்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கால்களை சிறியதாக வெட்டி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மஞ்சள் தூள் எண்ணெய் ஆகியவற்றை போட்டு குக்கரில் வேக வைக்கவும்.

10 விசில் குறைந்த தீயில் 40 நிமிடம் வைத்தால் தான் நன்றாக வேகும்.

பிரஷர் அடங்கியவுடன் மிளகாய், மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்த விழுதை போட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.

மொச்சையை தனியாக வேகவைத்து தண்ணீரை கீழே வடித்து விட்டு கொதிக்கும் காலுடன் சேர்க்கவும்.

நன்கு கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி கொதித்து வந்தவுடன் இறக்கவும்.

குறிப்புகள்: