ஆட்டுக்கால் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் - 3

வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்

கத்திரிக்காய் - 4

தேங்காய் துருவல் - 5 மேசைக்கரண்டி

புளி - ஒரு சிறிய எலுமிச்சைபழ அளவு

சின்ன வெங்காயம் - 6

பூண்டு - 4 பல்

இஞ்சி, பூண்டு அரவை - 1 மேசைக்கரண்டி

தக்காளி - 2

மல்லித்தூள் - 3 மேசைக்கரண்டி

சீரகத்தூள் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள்தூள் - 1 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

கரிவிடம் - ` தேக்கரண்டி

வெல்லம் - ஒரு இன்ச்

எண்ணெய் - 6 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து இருபது நிமிடம் வேக வைக்கவும்.

பிறகு கொண்டைக்கடலையும் குக்கரில் இதேப்போல் 15 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.

தக்காளியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். தேங்காயையும் அரைத்துக்கொள்ளவும்.

வெந்த கடலையை அகல பாத்திரத்தில் தண்ணீருடன் ஊற்றி, அதனுடன் வெந்த ஆட்டு காலையும் (தண்ணீர் இல்லாமல்) சேர்த்து மல்லி, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூளில் பாதியையும், அரைத்த தக்காளியில் ஒரு தேக்கரண்டி அளவு தனியே வைத்து விட்டு மீதியை இதில் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி கொதித்ததும், கத்திரிக்காயை நீளவாக்கில் நான்காக அரிந்து அதனுடன் சேர்த்து மூடி வேக விடவும்.

கத்திரிக்காய் வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி தேங்காய் விழுதையும் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.

இப்பொழுது இந்த குழம்பை இறக்கி வைத்து விட்டு, தாளிக்க வேறு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், கரிவிடம் போட்டு பொறிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.

வதங்கியதும் எடுத்து வைத்த தக்காளி விழுது, வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின் மிளகாய்த்தூளை சேர்த்து வதக்கி விட்டு கொதித்த குழம்பை இதில் ஊற்றவும். ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: